கவிதைகள்
என் எழுத்துப் பயணம்:
பெரும்பாலான எழுத்தாளர்கள், கதையின் அத்தியாயங்களின் முடிவில், “தொடரும்” என்ற சொல்லுக்குப் பதிலாக, கதையின் தலைப்புக்குப் பொருந்தும் வகையில் ‘மலரும்’, ‘மின்னும்’, ‘விடியும்’ என எழுதுவதை ரசித்திருக்கிறேன்.
அவ்வகையில் எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் தொடங்கியதே என் கவிதை பயணம்.
கதைகளின் அத்தியாயங்களை அக்கதையின் தலைப்பில் முடிப்தோடு மட்டுமல்லாமல், அடுத்த அத்தியாத்தில் நிகழவிருக்கும் காட்சிகளைப் பற்றி ஓரிரண்டு வரிகளில் கவிதை எழுத முயற்சி செய்தேன். அந்த முயற்சியின் பலனாய், இன்று கதைக்கான கரு, அத்தியாயங்களின் தொடக்கம், முடிவு என அனைத்தையும் கவிதை வடிவில் எழுதி வருகின்றேன்.
அவ்வப்போது, பொதுக் கவிதைகளும் எழுதி வருகிறேன். அவற்றை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.
படித்துப் பாருங்கள்; கவிதைகளின் நிறைகுறைகளை கூறி ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
| கவிதையின் தலைப்பு | கவிதையின் மையப்பொருள் |
|---|---|
| தேடும் அறம் | வாழ்க்கையின் அறநெறிகள் |

