ஓம் ஸ்ரீ சாயிராம்
20 hits
அமெரிக்காவில் பணியாற்றி வந்த கணவன்மார்களோடு dependent visaவில் இலவச இணைப்பாக வந்த இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி.
வாசிப்பும், இசையும் தான் என்னுடைய ஆயுட்கால நண்பர்கள். அதனால் நாலு சுவற்றில் அடைந்துகிடப்பதற்கு நான் என்றுமே வருந்தியதில்லை.
என் கணவர் என்னை வாரயிறுதிகளில் உள்ளூர் நூலகத்திற்கு அழைத்துச் செல்வார். பை கொள்ளாத அளவிற்குப் புத்தகங்களை எடுத்து வருவேன். மனம் நிறையும் வரை படிப்பேன். இப்படித் தான் அமெரிக்க வாசத்தின் முதல் சில வருடங்கள் கழிந்தது.
திடீரென ஒரு நாள் Foreign Language பிரிவில், ஐந்தாறு தமிழ் புத்தகங்கள் கண்ணில் தென்பட்டது. எனக்கு தலைகால் புரியவில்லை. அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்தேன்.
அதில் ஒன்று எழுத்தாளர் வத்சலா ராகவன் எழுதியிருந்த “ப்ரியங்களுடன் முகிலன்.”
1980s & 2010 காலச்சக்கரத்தின் முன்னும் பின்னும் நகரும் விதமான தோழமை பற்றிய முன்ஜென்மக் கதை.
மீராவின் கண்ணன் என்ற இளையராஜாவின் இன்னிசை வரிகள், ஒலியும் ஒளியும், புது மெட்டுக்களை cassetteல் பதிவு செய்வது, ரசனா விளம்பரம் என 80sன் பசுமையான நினைவுகளை கண்முன்னே நிறுத்திய வசீகரமான எழுத்துநடை.
“அம்மாடியோ! என்னம்மா எழுதியிருக்காங்க.” என கதையில் மெய்மறந்து போனேன். இவர் எழுதிய மற்ற கதைகளைப் படிக்க ஆர்வம் மேலோங்கியது.
அது ஒரு போட்டிக் கதை. புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த தளத்தில் தேடினேன். அவர் பெயரில் இந்த ஒரு கதை மட்டும்தான் இருந்தது.
கூகுள் ஆண்டவரை நாடினேன். ஏமாற்றிவிட்டார்.
முகநூல் பக்கத்தை அலசினேன். உழைப்பு வீண்போகவில்லை. வத்சலா ராகவன் அவர்களின் முகநூல் ID கிட்டியது. என் பாக்கியம், அவர் என் friend request ஏற்றுக்கொண்டார்.
அவ்வளவுதான். மறுகணமே கதை பற்றிய என் உணர்வுகளை எல்லாம் messengerல் கொட்டித்தீர்த்து அவரைப் பாடாய்ப் படுத்தினேன்.
மற்ற கதைகளைப் பற்றி விசாரித்தேன். நிறைய எழுதியிருக்கிறார் என்று அறிந்ததில் எனக்கு உச்சிக்குளிர்ந்து போனது.
சில நாட்களில் lockdown அறிவித்திருந்தனர்.
பிரச்சனைகளுக்கா பஞ்சம் என்ற நிலையிலும், முகிலன் கதையின் தாக்கம் மட்டும் குறையவில்லை.Subconsciously கண்ணன்-மீரா பற்றிய சிந்தனை மட்டுமே. கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் முகம் தெரியாத ஜோடிகளைப் பற்றிய repeated கனவு.
அந்த வருடம் தான் நானும் long career break
க்கு பிறகு பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்திருந்தேன். Lockdown என் வேலைக்கு உலை வைத்திருந்தது.
கொரோனா பற்றிய திடுக்கிடும் தகவல்கள், கெட்டக் கனவுகள், கதையின் தாக்கம் என மனவுளைச்சல் எதனால் என்று சொல்லமுடியாத அளவிற்கு கண்ணை மூடுவதற்கே ஒருவித பயம்.
எழுதினால் மனப்பாரம் குறையும் என பாட்டி சொன்ன வைத்தியத்தை கையாண்டேன்.
கனவில் வந்த காட்சிகளை எழுத ஆரம்பித்தேன். நாளிடைவில் கெட்டக் கனவுகள் மனத்திற்கு இதம் தரும் கனவுகளாக மாறின. அவற்றையும் எழுதினேன்.
கதை மாந்தர்களுக்குப் பெயர் சூட்டி கதைக்கும் அளவிற்கு கனவுப் பாத்திரங்களுடன் ஒன்றிப்பழக ஆரம்பித்தேன்.
வத்சலா ராகவன் அவர்கள் கதையில் நாயகி மீரா வின் ஆசை நிறைவேறாமால் போய்விடும். அது என்னை பெரிதாகத் தாக்கியது. மீரா சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்திலேயே என் கனவு நாயகிக்கு மீரா எனப் பெயர் சூட்டினேன். நாயகனுக்கு my favorite singer Hariharan பெயரை சுருக்கி ஹரி என்று பெயர் சூட்டினேன்.
(ஹரியும் கண்ணனின் திருநாமம் தானே எனப் பின்னாளில் தான் என் சிறுமூளைக்கு உரைத்தது.)
ஒரு நாள் தற்செயலாக, இவற்றை எல்லாம் என் அம்மாவிடம் படித்துக் காண்பித்தேன்.அழகான கற்பனை. இதை நீ ஏன் தொடர் கதையாக எழுதக் கூடாது என்று கேட்டார்.
அம்மா சொல்லை தட்டலாமா? எனக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால், எங்கே எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
சட்டென வத்சலா ராகவன் அவர்கள் நினைவு வர, அவரின் கதைகள் இருக்கும் தளத்திலேயே எழுதலாம் என்ற யோசனையில், அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு எழதத்தொடங்கினேன்.
முதல் அத்தியாயாம் பதிவிட்டவுடன் அவரை உடனே படிக்கச் சொல்லி நச்சரித்தேன்.
அவரும் மனமுவந்து படித்தார்.
“ரொம்ப நல்லா எழுதிருக்க. கொஞ்சம் எழுத்துப்பிழை மட்டும்தான் இருக்கு. சரி பண்ணிக்கோ.” என்றார்.
ஆனால் உண்மையில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருந்தன. எத்தனை பெருந்தன்மை அவருக்கு எனப் பூரித்தேன்.
அன்று தொடங்கியது என் எழுத்துப் பயணம்.
ஒரு சில மாதங்களில் பிரபலமான தளம் ஒன்று ஆன்ட்டி ஹீரோ போட்டி அறிவிக்க, என்னை அதில் கலந்துகொள்ளும் படி அறிவுறுத்தினார்.
“ஆன்ட்டி ஹீரோவா! அதெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது! என நான் பின்வாங்கினேன்.
ஆன்ட்டி ஹீரோ கதையை இப்படியும் நேர்மறையாக எழுதலாம் என அவர் தந்த ஊக்கத்தால் மட்டுமே என் comfort zone விட்டு வெளியே வந்து ஆடிஸம் பற்றிய கதை ஒன்றை எழுதினேன். எழுதியதோடு மட்டுமில்லாமல், தளத்தின் உரிமையாளரின் சிறப்புப் பாராட்டையும் பெற்றேன்.
இதில் நெகிழ்வான தருணம் என்னவென்றால், அந்தப் போட்டியின் முடிவுகள் வெளிவந்திருப்பதைப் பார்த்து, படித்து, என்னிடம் முதல் தகவல் சொன்னதே எழுத்தாளர் வத்சலா ராகவன் அவர்கள் தான்.
எந்த எழுத்தாளரிடமிருந்து ஒரு autographஆவது வாங்க வேண்டும் என்று ஏங்கினேனோ, அவரே என்னை ஒரு எழுத்தாளினியாக உருமாற்றியதோடு மட்டுமில்லாமல், இன்றுவரை என் வெற்றி தோல்விகளில் எனக்குப் பக்கபலமாக நிற்கிறார்.
இதுவரை நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. போனில் கூடப் பேசியதில்லலை. ஆனால் நினைக்கும் போதெல்லாம் message செய்து கதைக்கும் சுதந்திரத்தையும், அக்கா என்று பாசமாக அழைக்கும் உரிமையையும், அவ்வளவு ஏன், முன்னறிவிப்பு இல்லாமலேயே ஷக்தி குழுப் பதிவில் அவர் பெயரை tag செய்யும் அளவுக்கு என்னை உற்ற தோழியாக பாவிக்கிறார்.
நன்றிகள் பல பல வத்சலா அக்கா.![]()
![]()
![]()
பின்குறிப்பு.
பதிவில் குறிப்பிட்டிருக்கும் என் கற்பனை கதாபாத்திரமான ஹரி அவர்கள் நிஜத்தில் இருக்கிறார் என்று சமீபத்தில் அறிந்தேன். அந்த நெகிழ்வான தருணத்தைப் பற்றி “நிழல் நிஜமானது” என்ற தலைப்பில் தனிப் பதிவு ஒன்று எழுதியுள்ளேன்.


Please Comment Here