24 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
இக்கதையை ஆசிரியர், “சுந்தர நேசங்கள்” நெடு நாவலின் முதல் பாகமாக எழுதிருக்காங்க. ஒவ்வொரு கதையையும் தனியாகப் படித்தாலும் புரியும் அளவிற்கு திட்டமிட்டு எழுதியிருப்பது தான், நர்மதாவின் தனித்துவம் என்று சொல்லலாம்.
பறவைகளுக்காகத் துடிதுடிக்கும் வெள்ளந்தியான குணம் படைத்த கதாநாயகி ஒருபுறம்;
தன்மானத்தை உரசினால் சுள்ளென்று கொந்தளிக்கும் சுந்தரம் பொருந்திய இரண்டு கதாநாயகர்கள் மறுபுறம்;
என்று விறுவிறுப்பாகத் தொடங்கும் கதையில், என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பதற்றத்துடன் தான் கடைசி வரை படித்தேன்.
Pre-Final என்று சொல்லிவிட்டு, அதிலும் ருத்ரன், ருத்ர தாண்டவம் ஆட தயாராக இருக்கிறார் என்று “க்கு” வைத்து B.P ஏத்த உங்களால் மட்டும்தான் முடியும் ஆத்தரே.
பத்து பொருத்தம் பார்த்து நிச்சயம் செய்த பின்னும், மருமகனை முழுமனதாக ஏற்க மனமில்லாத பெண்ணின் தந்தை ருத்ரன்;
வீட்டில் பார்த்த வரன் என்று துணிந்து, நாயகன் மேல் ஆசை வளர்த்துக் கொள்ளும் மகள் மீனு;
என் மனைவி! என் வாழ்க்கை! என் ஆசாபாசங்கள்! என்று தன்னிலை மாறாமல் இருக்கும் மருமகன் ஈஸ்வரன்;
அனைவரின் குணங்களும் மிக மிக இயல்பாக இருந்தது.
Arranged Marriageல் இத்தனை தொல்லைகளா என்று வெறுத்துப்போகும் மீனாட்சிக்கு, ஆச்சி சொல்லும் அறிவுரை பிரமாதம். அதீதமாக உரிமை கொண்டாடும் தந்தைக்கும்-கணவருக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பல பெண்களின் பிரச்சனை இதுதான்.
அன்னம், கல்-ஆணி பாசமும், குறும்பும் அழகோ அழகு.
ராஜன் வந்த இடங்கள் எல்லாம் மிக சுவாரசியமாக இருந்தது. வயதுக்கு மீறிய அவன் பக்குவம் ரசிக்க கூடியதாக இருந்தது. அலுவலகத்தில் அட்டகாசம் செய்தாலும், “அண்ணி” என்ற அழைப்பில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டான்.
உங்கள் எழுத்து நடை பிரமாதம் ஆத்தரே! சில இடங்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன்!
“நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமும்!” என்று ஈஸ்வரன் Propose செய்த விதம். வாவ்! எத்தனை முறை படித்தாலும் மெய்சிலிர்த்தது.
அதே போல, மீனு “ஈசுப்பா!” என்று அழைப்பதும் அவள் அதற்குத் தந்த விளக்கமும் செம்ம ஆத்தரே!
ஏணி படிகளில் அமர வைத்து ஈஸ்வரன் அவள் பயத்தைப் போக்க வைத்த காட்சி அற்புதத்திலும் அற்புதம்.
ஆசிரியருக்கு சினிமா பாடல்கள் மேல் தீரா காதல் என்பதை கதை முழுக்க கவனிக்கலாம். அன்னம் & ஈஸ்வரனை வைத்து ஆங்காங்கே, கதைக்கு ஏற்ற பொருத்தமான பாடல்கள் இணைத்துள்ளார்.
Happy Ending கொடுக்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் நல்லவர் வல்லவராக மாற்றாமல், அவரவர் இயல்பு மாறாமல் கதை முடித்த விதம் பிரமாதம்.
சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் இடையில் மறப்போம், மன்னிப்போம், மலையளவு நேசிப்போம் என்று உணர்த்தும் அழகிய குடும்பக் கதை தந்த ஆத்தருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
கதைக்கான அமேசான் லிங்க்:
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here