31 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? ஒரே ஒருத்தர் பெயரைத் தான் சொல்லணும்னு, நீங்க மடக்கி கேட்டாலும் “My daddy strongest!”ன்னு எப்பவுமே அப்பாவுக்குத் தான் என் வோட்டு!
என் பதிலில் என் அப்பாவைவிட, என் அம்மா தான் அதிக சந்தோஷப்படுவா. “என்னை மாதிரியே அப்பா செல்லமா இருக்குறாளே என் பொண்ணு”ன்னு சொல்லி சொல்லி பூரிச்சுப்போவா. That’s the specialty of my mom.![]()
![]()
எப்பவுமே, எனக்கு என் அம்மா சொல்லும் அறிவுரைகளும் சரி; அவரின் ஆதங்கமும் சரி; சட்டுன்னு ஏத்துக்க மாட்டேன்; இல்லேன்னா புரிஞ்சிட்டு இருக்கமாட்டேன். ஆனால் life decision வரும்போது அது 100% சரியா இருக்கும். அப்படி நாலு விஷயங்களைப் பற்றிதான் இந்தப் பதிவில் சொல்லப்போறேன்.
1.எங்காத்து கிச்சன் பொறுத்தவரை அது அம்மா டிபார்ட்மென்ட. காய் கட் பண்ண, பாத்திரம் தேய்க்கன்னு நானும் என் தங்கையும் எடுபிடிகளா வேலை செய்வோமே தவிர, அடுப்புகிட்ட போனதில்ல. அப்பாவும், தாத்தாவும் சாப்பிட வரதோட சரி;
ஆறாம் வகுப்பில் படிச்சிண்டு இருந்தேன். ஒருநாள் மதியம் அம்மா கண்ணயர்ந்த நேரம், டீ போட்டுட்டு அம்மாவை எழுப்பிக் கொடுத்தேன்.
அம்மா கண்ணில் அத்தனை நெகிழ்ச்சி. “என்னதான் நானே ராணி நானே மந்திரின்னு முழு சுதந்திரத்தோட மூணு வேளையும் சமைச்சாலும், என்னை உட்கார வச்சு யாராவது சமைச்சுப் போடமாட்டாளான்னு ஏக்கமா இருக்கும் விது.” அப்படின்னு கண்கலங்கினா.
அப்போ எனக்கு அதோட அர்த்தம் அந்தளவுக்குப் புரியல. ஓகேமான்னு தலையாட்டினேன். ஆனால் கல்யாணமாகி, அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான், அம்மா சொன்ன அந்த வார்த்தைகளில் உள்ள ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிஞ்சுது.
2. வருஷம் பதினாறு! எனக்கும் Sweet 16ல் ஒரு லவ் ப்ரபோஸல் வந்தது.
நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, girls schoolல படிச்சுட்டு வந்த எனக்கு, Co-educationல இப்படி ஒரு அனுபவம் ரொம்ப புதுசாவே இருந்துது.
“இப்படியெல்லாம் லவ் லெட்டர் தந்தீன்னா, என் அப்பாகிட்ட சொல்லிடுவேன்,” அப்படின்னு சொல்ல மனசு பதறினாலும், “இதெல்லாமா அம்மா அப்பாகிட்ட சொல்லுவ? பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு; இல்ல பிடிக்கலன்னு சொல்லு!” கொஞ்சம் பெரிய மனுஷி மாதிரியும் யோசிச்சேன்.
ரெண்டும் choiceம் கலந்துகட்டி, “உனக்குத் தைரியமிருந்தா, என் அப்பாகிட்ட வந்து, என்னை லவ் பண்ணறேன்னு சொல்லு பார்க்கலாம்!” கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்ற ரேஞ்சுல அவன்கிட்ட சவால் விட்டுட்டு வந்துட்டேன்.
அன்னைக்கு Eveningஏ என் அம்மா என் முகத்தின் அஷ்டகோணலை பார்ததே ஏதோ சரியில்லன்னு கண்டுபிடிச்சுட்டா.
ஒண்ணுமில்லன்னு நான் எத்தனை முயற்சி செஞ்சு சமாளிச்சாலும், wantedஆ முன்வந்து adolescence, infatuation அது இதுன்னு free adviceஆ வாரி வழங்கினா.
‘நான்தான் எதுவுமே செய்யவில்லையே!’ என அந்த சமயத்துக்கு கோபமும் எரிச்சலும் வந்தது தான். ஆனால் அன்னைக்கு அம்மா எனக்கு போதிக்காம விட்டிருந்தா, மனம் போன போக்கிலே தடுமாறியிருக்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என உணரக்கூடிய சம்பவங்கள் பிற்காலத்தில் நடக்கவே செய்தது.
3.காலேஜ் முடிச்சு, முதல் வேலையில் சேர்ந்தேன். Bank Jobன்னா நாலு விஷயம் சொல்லித்தருவா; அதை அப்படியே செய்தால் போதும்ன்ற மனநிலையில் கிளம்பினேன்.
முதல் நாள்; Computer Access, Login details, ID card, Debit card for salaryன்னு வரவேற்பு எல்லாம் பலமாவே இருந்துது. கூடவே ஐநூறு பக்கங்கள் கொண்ட மூன்று process manualsஐ தந்தார் என் மேனேஜர்.
ரெண்டு நாளுல படிச்சுடு; கேள்வி கேட்பேன்னு சொல்லிட்டு நகர்நதுட்டாரு; 9-5 office time; அஞ்சு மணியாச்சேன்னு ஆத்துக்கு கிளம்பினால், “அதுக்குள்ள படிச்சுட்டியா! கேள்வி கேட்கவா!”ன்னு மிரட்டல்.
நாளைக்கு வந்து படிக்கிறேன்னு சொன்னதுக்கு, “கிளம்ப என்ன அவசரம்? இங்க ஆபிஸ் டைம் அஞ்சு மணினாலும், எல்லாரும் ஏழு எட்டு மணிவரைக்கும் வேலை பார்க்கணும்”ன்னு கண்டிஷன் வேற.
எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆத்துக்குப் போனதும், வேலைக்குப் போக மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டேன். “அத்தனை நேரமா ஆபிஸ்ல இருக்கணும்?”ன்னு அப்பாவும் resign பண்ண சொல்லிட்டா. ஆனால் அம்மா “NO Way”ன்னு பிடிவாதமா இருந்து, மறுநாள் என்னை hostelல விடாத குறையா துரத்திவிட்டா.
“உனக்கு கொஞ்சமாவது பாசம் இருக்கா?”ன்னு அத்தனை வெறுத்துப்போய் சண்டைபோட்டேன்.
“எதுவும் புதுசுல கஷ்டமாதான் இருக்கும். முயற்சியே செய்யாமல் வேண்டாம்னு ஒதுங்கறது ரொம்பத் தப்பு.
இனி நீ உன் வாழ்க்கையில் இப்படி நிறைய நிறைய நெருக்கடிகளும் சவால்களும் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படித் தொட்டதுக்கெல்லாம் பயந்து ஓடினா, ஓடிட்டே தான் இருக்கணும்,” அது இதுன்னு அம்மா தினம் தினம் அறிவுரை சொல்லறதும், நான் மூக்கால அழுதுண்டே கிளம்புறதும்னு ஒரு மாசம் ஓடித்து.
முதல் மாசம் சம்பளம் வாங்கினதும் எனக்குள்ள அத்தனை தன்னம்பிக்கை. அதுக்குப் பிறகு வந்த promotions, increments முதல் இன்று பார்க்கும் school job வரை, ஒவ்வொரு முறை பாராட்டப்படும் போதும், அம்மாவை நினைக்காமல் இருப்பதே இல்லை.
இப்பவும் எங்களுக்குள்ள அதே டர் டர் குட்டி குட்டி சண்டைகள் தான். அம்மா சொன்னதும் கேட்க மாட்டேன்தான். ஆனால் in the end, அம்மா வாக்குதான் பலிக்கும்.
4.அதுக்கான ongoing proof…. கனவுகளையும் கவிதைகளையும் டைரியில் கிறுக்கிட்டு இருந்த என்னை, ஆன்லைனில் எழுதச்சொல்லி நச்சரிச்ச என் அம்மாவின் அன்புத்தொல்லைகளின் result, “நானும் ஒரு ஆத்தர்”ன்னு சட்டை காலரை தூக்கிட்டுச் சுத்திட்டு இருக்கேன்.
இந்தப் பயணம் தொடரும் என்றென்றும். லவ் யூ அம்மா.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here