ஓம் ஸ்ரீ சாய்ராம்
84 hits
ஏழாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த குடிமையியல் ஆசிரியர் ரமணன், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஊறிப்போயிருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு, தபால் தலை என்பதன் அடிப்படை அர்த்தம் கூடத் தெரியவில்லை எனச் சலித்துக்கொண்டார்.
மாணவர்கள் அறிந்திருக்காத அளவிற்கு, தபால் தலைகள் அப்படியொன்றும் சங்கக் காலத்துப் பொருள் இல்லையே என நமுட்டாகச் சிரித்தார், எதிரில் அமர்ந்திருந்த கணினி ஆசிரியர் சடகோபன்.
‘இந்திய அஞ்சல் துறைதான் தபால் தலைகளை வழங்குகிறது. சரியா? தவறா?’ என்ற கேள்விக்குத், தபால் தலை என்பதன் அர்த்தம் தெரியவில்லை எனக் காரணம் எழுதியிருந்த சடகோபனின் மகனுடைய விடைத்தாளை நீட்டினார் ரமணன்.


Please Comment Here