47 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
செய்க்கூலி சேதாரம் என நகைக்கடை வியாபாரி சுட்டிக்காட்டிய கூடதல் செலவுகளை எல்லாம் லாவகமாய் தட்டிக்கழித்துவிட்டேன் என ஜம்பமடித்து, ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த கணவரிடம் தன் வலது கையில் மின்னிய தங்க வளையல்களைக் குலுக்கிக் காட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தாள் உமையாள்.
‘நானும் சளைத்தவள் இல்லை!’ என்ற ரீதியில்,
“ராஜா! அடிக்கடி ஆபிஸ் டூர் போயிட்டு வர உனக்கு உபயோகமா இருக்குமேன்னு, நகைக்கடையில் இலவசமா தந்த கைப்பைக்குப் பதிலா சூட்கேஸ் தரச் சொல்லிக் கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்,” என அதை பெருமிதம் பொங்க மகனின் கையில் திணித்தார் சிவகாமி.
‘ஒரே நாளில் வரலாறு காணாத தங்க விலை சரிவு!’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான செய்தியைக் கேட்டவன் தள்ளாடி விழப்போக, அவன் கையில் வைத்திருந்த சூட்கேசின் கைப்பிடி கையோடு வந்தது.


Please Comment Here