32 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அந்த விலை உயர்ந்த ஷோகேஸ் பொம்மையை, பாதிக்குப் பாதி விலையில் வாங்கியதை எண்ணி சந்தோஷத்தில் மிதந்தாள் சாரதா.
காரில் ஏறி அமர்ந்ததும் தன் முகநூல், இன்ஸ்டா என எல்லா சமூக ஊடகங்களிலும் பொம்மையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தன் ஷாப்பிங்க் திறனைப்பற்றி பரப்பிக்கொண்டிருந்தாள்.
வீட்டை வந்தடைந்ததும், பொம்மையைப் படு ஜாக்கிரதையாக அடைகாத்தபடி காரை விட்டு இறங்கினாள், மடியில் வைத்திருந்த ஐபோனை மறந்த நிலையில்.
+1
+1
+1
5
+1
+1


Please Comment Here