40 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
வகுப்பறையில் சுயிங் கம் மெல்லக்கூடாது என ஆசிரியர் ஜாடைமாடையாக நினைவூட்டிய போதும், வகுப்பு நேரம் முழுவதும் கமுக்கமாய் வாய்மூடியபடி அரைத்ததோடு மட்டுமில்லால், இறுமாப்புடன் வெளியேறினான் திலகன்.
கண் முன்னே தப்பித்துச் செல்கின்றவனைக் கண்டிக்காமல் விட்டுவிட்டீர்களே எனச் சுட்டிக்காட்டினார், அன்று ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வந்திருந்த புது முக ஆசிரியர் அறிவுமதி.
பெயர் சொல்லி அழைத்துக் கண்டித்திருந்தால், மளமளவென்று விழுங்கி குடலைப் புண்ணாக்கிக் கொண்டிருப்பான் என மென்னகை உதிர்த்தார் ஆசிரியர் அன்புச்செல்வன்.


Please Comment Here