32 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சர்வதேச விமானம் தரையிறங்கியதும் தாய் மண்ணின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து பூரித்தாள் ஶ்ரீமதி.
மணிக்கணக்காய் முன்வாசலில் தவம் கிடந்த தாயுள்ளம், பயணிகளுக்கு மத்தியில் மகளின் முகத்தைக் கண்டதும் பரவசத்தில் மிதந்தது.
தாயும் மகளும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நெகிழ்ந்த அந்த இரண்டு நிமிடங்கள் யுகமாகத் தோன்ற, “நல்ல நாள் பார்த்து ஶ்ரீமதியை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் சம்பந்தி,” அறிவித்து மருமகளிடம் புறப்படலாம் எனக் கண்ணசைத்தார் மாமியார்.


Please Comment Here