127 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நூறு மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவியாக வந்திருக்கும் மகிழ்ச்சியை இரண்டு நிமிடங்கள் கூட அனுபவிக்க விடாமல், பவித்ராவின் கண்களை உறுத்தியது, ஆசிரியர் செய்திருந்த அந்தக் கூட்டல் பிழை.
சொன்னால் சென்டம், ராங்க் என அனைத்தும் கையைவிட்டுப் போய்விடும் எனத் தயங்கி நின்றவளின் மனசாட்சி எட்டி உதைக்க, தன்னையும் மீறி ஆசிரியரின் மேஜை முன் வந்து நின்றாள்.
மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி விடைத்தாளை அலசிய ஆசிரியர், ‘உன் நேர்மைக்கு ஒரு மதிப்பெண் வழங்குகிறேன்!’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி மென்னகையுடன் திருப்பித் தந்தார்.
பின்குறிப்பு:
என் பள்ளிப் பருவத்து சரித்திர ஆசிரியர் திருமதி. ரஜினி அவர்களின் உயர்ந்த குணத்தை உணர்த்தும் இக்கதை, கதையல்ல நிஜம். குருவே சரணம்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here