4 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
தாயில்லா பிள்ளை இவள் உறவிற்கு ஈடிணை இல்லை – என்று
தாயுமானவன் பறைசாற்றும் பாசத்திற்கு எல்லையும் இல்லை;
உதாசீனம் செய்யும் சுற்றத்தைக் காண விருப்பமில்லை- விதிவசத்தால்
உறவுகளைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை;
உள்ளத்தில் தேக்கிவைத்த ஏக்கங்களுக்கு அளவில்லை – மனத்தில்
பூட்டிவைத்த ரகசியங்களுக்குக் குறைவில்லை – வழியில்
பந்தங்களுடன் ஏற்படும் சஞ்சலங்களுக்கும் பஞ்சமில்லை;
பழிச்சொல்லுக்குப் பலியாகி இழக்கிறான் சமநிலை – முன்கோபத்தில்
பொத்தி வளர்த்தத் தாரகையைப் பிரிய வேண்டிய சூழ்நிலை – பதற்றத்தில்
பல தவறுகள் செய்து தடுமாறுகிறான் தன்னிலை!
உறவுகளே வேண்டாமென வெறுத்து,
உள்ளத்து ரகசியங்களை மறைத்து,
உலகமே அவள் மட்டும்தான் என்று,
உரிமையை நிலைநாட்ட போராடுவது ஏன்-தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்!


Please Comment Here