கதை அல்ல நிஜம்
என் எழுத்துப் பயணம்:
சமீபத்தில் என் பள்ளி ஆசிரியரை சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியது. கதைகள் எழுதும் என் ஆர்வத்தை மெச்சியவர், Shakthi – Women Power என்னும் முகநூல் குழுவில் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அந்தக் குழுவின் சிறப்பு அம்சமே பெண்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்கமளிப்பது தான்.
கற்பனை கதைகளை மட்டுமே எழுதி வந்த எனக்கு, உண்மை சம்பவங்களையும் எழுத்து வடிவத்தில் குட்டிக் கதைகளாக எடுத்துச்சொல்ல முடியும் என உணரவைத்தது, அந்தக் குழுவினர் வாராவாரம் தந்த சுவாரசியாமான தலைப்புகள்.
அங்கு பதிவிட்ட நெஞ்சில் நின்ற நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன் வாசகர்களே.
படித்துப் பாருங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்கிவியுங்கள்.
| நெஞ்சில் நின்ற நினைவுகள் | நினைவுகளின் மையப்பொருள் |
|---|---|
| அன்றைக்கும் இன்றைக்கும் மத்தியில் நான் | மாறி வரும் காலம், கலாச்சாரம் |
| வாசகியை எழுத்தாளினியாக மாற்றிய தோழமை | நட்பு, நலம் விரும்பி |
| நிழல் நிஜமானது! | பூர்வ ஜென்ம பந்தம் |
| வெள்ளி விழா நட்பு | பள்ளித்தோழமை |
| அம்மாவின் வாக்கு அருள்வாக்கு! | அன்னையர் தினம், அம்மாவும் நானும் |
| என் அப்பாவின் தனித்துவங்கள்! | தந்தையர் தினம், அப்பாவும் நானும் |

